search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடலூர் மகளிர் கோர்ட்டு"

    சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மீன் வியாபாரிக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஏ.வள்ளியம் மேலத்தெருவை சேர்ந்தவர் கண்ணுசாமி. இவருடைய மகன் சின்னதுரை (வயது 34). மீன் வியாபாரி.

    கடந்த 7.3.2017 அன்று அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் 15 வயது சிறுமி தனியாக இருப்பதை அறிந்த சின்னதுரை, அந்த வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் அந்த சிறுமியை அழைத்துக்கொண்டு அங்குள்ள பாப்பாத்தி அம்மன் கோவில் அருகில் உள்ள கரும்பு வயலுக்கு சென்றார். அங்கு அந்த சிறுமிக்கு மயக்க மருந்து கலந்த ஜூஸ் கொடுத்தார். அந்த ஜூசை குடித்தவுடன், சின்னதுரை அந்த சிறுமியிடம் எனக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை.

    ஆகவே உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அதற்கு மறுப்பு தெரிவித்த சிறுமியை சின்னதுரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் மயங்கிய அந்த சிறுமி சிறிது நேரம் கழித்து எழுந்தார். அப்போது அந்த சிறுமியிடம் இது பற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.

    இதனால் பயந்து போன சிறுமி யாரிடமும் நடந்த சம்பவத்தை சொல்லவில்லை. இதை பயன்படுத்தி அந்த சிறுமியை சின்னதுரை பலமுறை மிரட்டி உல்லாசமாக இருந்தார். இதில் அந்த சிறுமி 3½ மாத கர்ப்பிணியானார். இது பற்றி அந்த சிறுமி சின்னதுரையிடம் கூறியபோது, அவர் சில மாத்திரைகளை கொடுத்துள்ளார். அதில் அவரது கர்ப்பம் கலைந்து விட்டதாக தெரிகிறது.

    இதை அறிந்த அந்த சிறுமியின் தந்தை விருத்தாசலம் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னதுரையை கைது செய்தனர்.

    இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி லிங்கேஸ்வரன் தீர்ப்பு கூறினார். அதில், இவ்வழக்கில் சின்னதுரை மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 14 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு பெற்றுக்கொடுக்க இலவச சட்ட உதவி மையத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வபிரியா ஆஜராகி வாதாடினார்.
    பள்ளி மாணவிகள் இருவரை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகர் உள்பட 16 பேர் குற்றவாளிகள் என்று கடலூர் மகளிர் கோர்ட்டு பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. #Students #Harassment
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2014-ம் ஆண்டு 7-ம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவியும், 8-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவி ஒருவரும் இணைபிரியாத தோழிகளாக இருந்தனர்.

    இவர்களில் 13 வயது மாணவி தனது பெற்றோரை இழந்தவர் என்பதால், தனது பாட்டியின் பராமரிப்பில் தங்கி படித்து வந்தார்.

    இவர்கள் பள்ளிக்கூடத்தின் அருகே உள்ள இட்லி கடைக்கு சென்று பலகாரங்களை வாங்கி சாப்பிடுவது வழக்கம். ஒருநாள் 13 வயது மாணவி பலகாரம் வாங்குவதற்காக இட்லி கடைக்கு சென்றபோது இட்லி கடை உரிமையாளரான செந்தில்குமாரின் மனைவி தனலட்சுமி (வயது 40) தனது கள்ளக்காதலனான திருக்கண்டேஸ்வரத்தை சேர்ந்த டவர் என்ற ஆனந்தராஜூடன் (24) உல்லாசமாக இருந்ததை பார்த்து விட்டார்.

    அதனால் அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி, தனது லீலை வெளியே தெரியாமல் இருப்பதற்காக அந்த மாணவியை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று கட்டாயப்படுத்தி, ஆனந்தராஜூடன் உல்லாசமாக இருக்க வைத்தாள். அதன்பிறகு ஆனந்தராஜ் பலமுறை மிரட்டி அந்த மாணவியுடன் உல்லாசம் அனுபவித்ததோடு, தனது நண்பர்களான திட்டக்குடியைச் சேர்ந்த மோகன் என்ற மோகன்ராஜ் (28), மதிவாணன் (23) ஆகியோருக்கும் மாணவியை விருந்தாக்கினான்.

    இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவி தனலட்சுமியிடம் கூறி கதறி அழுதார். பின்னர் தனலட்சுமி மிரட்டியதால் தனது 14 வயது தோழியையும் தனலட்சுமியின் வீட்டுக்கு அழைத்துச்சென்றார். அந்த மாணவியும் ஆனந்தராஜின் காமப்பசிக்கு இரையானாள்.

    பின்னர் தனலட்சுமி மாணவிகள் இருவரையும் விருத்தாசலத்தில் உள்ள விபசார புரோக்கர் கலாவின் வீட்டுக்கு அழைத்துச்சென்று கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தினாள்.

    அதன்பிறகு கலா இருவரையும் திட்டக்குடியைச் சேர்ந்த மதபோதகர் அருள்தாஸ் என்பவர் வீட்டுக்கு அனுப்பிவைத்தாள். அங்கு அவர் 13 வயது மாணவியுடன் உல்லாசம் அனுபவித்தார்.



    இதேபோல் கலாவும், தனலட்சுமியும், சக புரோக்கர்களும் இரு மாணவிகளையும் விழுப்புரம் மாவட்டம் வளவனூர், சேலம், கடலூர் மாவட்டம் வடலூர் ஆகிய இடங்களுக்கு அழைத்துச்சென்று லாட்ஜிலும், வாடகை வீடுகளிலும் தங்க வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தினார்கள்.

    கடைசியாக வடலூரில் சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி ஆகியோருக்கு மாணவிகள் விற்கப்பட்டனர். அவர்கள் இரு மாணவிகளையும் வடலூரில் உள்ள வாடகை வீட்டில் தங்கவைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தினார்கள். ஒருநாள் இரவில் மாணவிகள் இருவரும் அங்கிருந்து தப்பி திட்டக்குடிக்கு சென்று போலீசில் தங்களுக்கு நேர்ந்த கொடுமை பற்றி தெரிவித்தனர்.

    இது தொடர்பாக 10 பெண்கள் உள்பட 19 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

    1. சதீஷ்குமார் (28), அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் இடையாக்குறிச்சியை சேர்ந்தவர்.

    2. தமிழரசி (27), சதீஷ்குமாரின் மனைவி.

    3. கலா (48), விருத்தாசலம் நாச்சியார்பேட்டை.

    4. தனலட்சுமி, திட்டக்குடி பெரியார் நகரைச் சேர்ந்த செந்தில்குமாரின் மனைவி.

    5. மதபோதகர் அருள்தாஸ்

    6. ஸ்ரீதர் (23), ஊ.மங்கலம் காட்டுக்கூனங்குறிச்சி

    7. பாத்திமா (35), வளவனூர் கூட்டுறவு நகரைச் சேர்ந்த சாதிக் பாட்ஷா என்பவரின் மனைவி.

    8. மகா என்ற மகாலட்சுமி (20) பண்ருட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மனைவி.

    9. ராதா என்ற கிரிஜா (35), நெல்லிக்குப்பம் சுல்தான்பேட்டை.

    10. ஷர்மிளாபேகம் (34), விருத்தாசலம்.

    11. கவிதா என்ற ராஜலட்சுமி (34), வடலூர் ஆபத்தராணபுரத்தைச் சேர்ந்த அஞ்சாபுலி என்பவரின் மனைவி.

    12. அன்பழகன் (28), சேலம் அயோத்தியாபட்டணம்.

    13. அமுதா (28), அன்பழகனின் மனைவி.

    14. மோகன் என்ற மோகன்ராஜ் (28), திட்டக்குடி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர்.

    15. மதிவாணன் (23), திட்டக்குடி.

    16. அன்பு என்ற செல்வராஜ், விருத்தாசலம்.

    17. டவர் என்ற ஆனந்தராஜ், திருக்கண்டேஸ்வரம்.

    18. பாலசுப்பிரமணியன் (42), விருத்தாசலம் புதுப்பேட்டை பாரதிநகர்.

    19. ராதா என்ற ராதிகா (30) பண்ருட்டி செக்கு மேட்டுத்தெருவைச் சேர்ந்த முத்துவேல் என்பவரின் மனைவி.

    மேற்கண்ட 19 பேர் மீதும் ‘போக்சோ’ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். மற்ற 17 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே இந்த வழக்கின் விசாரணையில் தொய்வு ஏற்பட்டதால் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று 14 வயது மாணவியின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு கடந்த 4-7-2016 அன்றைய தேதி இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து சி.பி. சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லாவண்யா மேற்பார்வையில் கடலூர் இன்ஸ்பெக்டர் தீபா விசாரணை நடத்தி 19 பேர் மீதும் கடலூர் மகளிர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு விசாரணை கடலூர் மகளிர் கோர்ட்டில் நீதிபதி லிங்கேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட இரு மாணவிகளும் கோர்ட்டில் ஆஜராகி 17 பேரையும் அடையாளம் காட்டினார்கள். மேலும் சிறைச்சாலையில் நடந்த அடையாள அணி வகுப்பிலும் இரு மாணவிகளும் 17 பேரையும் அடையாளம் காட்டினார்கள்.

    இந்த வழக்கு விசாரணை நடைபெறும் போது, பாதிக்கப்பட்ட இரு மாணவிகளும் பாதுகாப்பு கருதி சென்னையில் உள்ள காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களில் ஒரு மாணவி மேல்படிப்பு படிக்கிறார்.

    எனவே இரு மாணவிகளுக்கும் அரசு சார்பில் இடைக்கால நிவாரணம் வழங்கக்கோரி அரசு வக்கீல் க.செல்வபிரியா கடலூர் மகளிர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி லிங்கஸ்வேரன் இரு மாணவிகளுக்கும் இடைக்கால நிவாரணமாக தலா 2 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டார்.

    இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் 17 பேரும் நேற்று கடலூர் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    நீதிபதி லிங்கேஸ்வரன் மாலை 4 மணி அளவில் பரபரப்பான தீர்ப்பை வழங்கினார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மகா என்ற மகாலட்சுமி என்பவர் சதீஷ்குமாரால் பாதிக்கப்பட்டவர் என்பதால் மகாலட்சுமியை மட்டும் விடுதலை செய்து நீதிபதி லிங்கேஸ்வரன் உத்தரவிட்டார். மதபோதகர் அருள்தாஸ் உள்பட மற்ற 16 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

    இவர்களுக்கான தண்டனை விவரம் வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் என்று நீதிபதி லிங்கேஸ்வரன் அறிவித்தார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் க.செல்வபிரியா ஆஜராகி வாதாடினார். #Students #Harassment
    ×